×

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி ஆண்டுவிழா

நாசரேத், ஏப். 9: நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் 59வது ஆண்டு விழா நடந்தது. பவ்டா பைனான்ஸ் லிமிடெட் நிர்வாக துணை இயக்குநர் அல்பினா ஜோஸ் தலைமை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் செல்வராஜ் ஐசக் ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரி பாடகர் குழுவினர் பாடல் பாடினர். இயற்பியல் துறை தலைவர் கிரேஸ்லின் ஜூலியானா வேத பாடம் வாசித்தார். கணிதத்துறை தலைவர் அலிஸ் பாப்பா வரவேற்றார். ஆங்கிலத்துறை இணை பேராசிரியர் பிரமிளா அன்பரசி, சிறப்பு அழைப்பாளர்கள் குறித்து பேசினார். கல்லூரி முதல்வர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். திருமண்டல குருத்துவ செயலர் குருவானவர் தாமஸ் வாழ்த்திப் பேசினார். மாணவ- மாணவியரின் நடனம், நாடகம் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பல்கலைக்கழக தேர்வில் ரேங்க் எடுத்த மாணவ- மாணவியருக்கும் மற்றும் பல்வேறு தேர்வில் சாதனை படைத்தவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டன.

இதில் திருமண்டல கல்லூரிகளின் நிலவரக்குழு செயலர் ஜெபச்சந்திரன், ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி தாளாளர் மாமல்லன், மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுதாகர், நாசரேத் ஆர்ட் தொழிற்பள்ளி தாளாளர் திலகர், திருமண்டல செயற்குழு உறுப்பினர் ஸ்டீபன் சாலமோன், தூய யோவான் ஆசிரியர் பயிற்சி நிறுவன தாளாளர் விக்டர் மோகன்சிங், கனோன் தாமஸ் சித்தர் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி தாளாளர் டேவின் சாலமோன், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் தனசிங், சாமுவேல் ராஜேந்திரன், கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரன் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர். வரலாற்றுத் துறை தலைவர் தாமஸ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை திருமண்டல லே செயலரும், கல்லூரி செயலருமான எஸ்.டி.கே.ராஜன், முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags : Nazareth Markazis College ,Nazareth ,Albina Jose ,Executive ,Powda Finance Limited ,Selvaraj Isaac ,Department of Zoology ,
× RELATED நித்திரவிளை அருகே வாகன சோதனையில் ரூ.2.25 லட்சம் சிக்கியது