- ஆஷனா
- முஹல்கரை தூய ஸ்தீவன் கோயில்
- நாசரேத்
- தூய ஸ்தீவன் கோயில்
- முஹல்கர்
- நசரேத் அருகில்
- தெமன்குளம்
- முயல்கர தூய ஸ்டீவன்
- 116 வது அர்ப்பணிப்பு திருவிழா
நாசரேத், ஏப். 8: மூலக்கரை தூய ஸ்தேவான் ஆலயத்தில் நடந்த அசன விருந்தில் திரளானோர் பங்கேற்றனர். நாசரேத் அருகே உள்ள குளத்துக்குடியிருப்பு சேகரம், தேமாங்குளம் மூலக்கரை தூய ஸ்தேவான் ஆலய 116வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு ஆலய வளாகத்தில் அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது. சேகரகுரு ஸ்டான்லி சாம் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்ைத தொடங்கி வைத்தார்.
இதில் தேமாங்குளம், மூலக்கரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆலயத்தில் பண்டிகை ஆராதனை மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது. இதில் குருகாட்டூர் சேகர தலைவர் டிக்சன் செய்தி அளித்தார். ஏற்பாடுகளை சேகரகுரு ஸ்டான்லி சாம், சபை ஊழியர் ராஜ்குமார், சேகர உறுப்பினர் ரவிக்குமார் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.
