×

மயிலாடுதுறையில் தேர்தல் பறக்கும்படை தீவிர வாகன சோதனை

மயிலாடுதுறை, ஏப்.8: மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. அதன்படி, வாக்காளர்களுக்கு சட்ட விரோதமாக பணம் கொடுப்பதையும், பரிசுகள் வழங்குவதையும் தடுக்கும் வகையில் கண்காணிக்க பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.அந்த வகையில் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர்.

மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்ப தையும், பரிசுகள் வழங்குவதையும் தடுக்கும் வகையில் 9பறக்கும் படை களும், 9 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர மாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மயிலாடுதுறை சின்னகடை தெருவில் வேளாண்மை அலுவலர் லாரன்ஸ் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பழனிவேல் உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Tags : Election Flying Squad ,Mayiladuthurai ,Flying Squad ,Tamil Nadu ,
× RELATED நித்திரவிளை அருகே வாகன சோதனையில் ரூ.2.25 லட்சம் சிக்கியது