×

மயிலாடுதுறையில் 56 பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்களாக பணியாற்ற சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

மயிலாடுதுறை, ஏப்.8: மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ள 56 வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்களாக பணியாற்றும் 59 பேருக்கு தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு கலெக்டர் காந்த் தலைமையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற தேர்தலையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி வழியாக சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான காந்த் தலைமையில், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் நேகா சர்மா, சீர்காழி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ரோணங்கி குர்மநாத், பூம்புகார் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சஞ்சய்குமார் சிங் யாதவ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

பணி ஒதுக்கீடுக்கு பின் மாவட்ட கலெக்டர் காந்த் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெறுகிறது. மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி தனி, பூம்புகார் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் 950 வாக்குச்சாவடிகள், 446 வாக்குச்சாவடி அமைவிடங்கள் உள்ளன. இதில் 54 பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு மற்றும் 950 வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.இவ்வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள், காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். இப்பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளராக பணியாற்றுவதற்கு மத்திய அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 54 பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்கு 59 நுண் பார்வையாளர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நுண்பார்வையாளர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணித்து தேர்தல் அலுவலகத்திற்கு அறிக்கையாக தகவல்களை வழங்குவார்கள் என மாவட்ட கலெக்டர் காந்த் தெரிவித்தார்.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லியோ பாண்டின்நாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேர்தல் குமரையா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Mayiladuthurai ,Election Commission ,Collector ,Kanth ,Mayiladuthurai District Collectorate… ,
× RELATED நித்திரவிளை அருகே வாகன சோதனையில் ரூ.2.25 லட்சம் சிக்கியது