×

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் 150 மனுக்கள் ஏற்பு; 70 மனுக்கள் தள்ளுபடி

திண்டுக்கல், ஏப். 8: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளிலும் தாக்கல் செய்யப்பட்ட மொத்தம் 220 வேட்பு மனுக்களில் 150 மனுக்கள் ஏற்கப்பட்டு, 70 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தமிழகத்தில் வரும் ஏப்.23ம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக கடந்த மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழநி, வேடசந்தூர், நத்தம் என 7 தொகுதிகளிலும் மொத்தம் 220 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது.

*திண்டுக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்பட 25 மனுக்கள் ஏற்கப்பட்டு 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
*ஆத்தூர் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்பட 18 மனுக்கள் ஏற்கப்பட்டு 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
*நிலக்கோட்டை தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்பட 17 மனுக்கள் ஏற்கப்பட்டு 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
*ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்பட 17 மனுக்கள் ஏற்கப்பட்டு 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
*பழநி தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்பட 26 மனுக்கள் ஏற்கப்பட்டு 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
*வேடசந்தூர் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்பட 23 மனுக்கள் ஏற்கப்பட்டு 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
*நத்தம் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சைகள் உள்பட 24 மனுக்கள் ஏற்கப்பட்டு, 17 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 150 மனுக்கள் ஏற்கப்பட்டு, 70 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

Tags : Dindigul district ,Dindigul ,Tamil Nadu ,
× RELATED நித்திரவிளை அருகே வாகன சோதனையில் ரூ.2.25 லட்சம் சிக்கியது