×

3 ஆண்களுடன் ஜாலியாக வாழ்ந்த நிலையில் என்னை புரிந்து கொள்ளும் மனுஷன் இன்னும் கிடைக்கல!: 4வது துணையை தேடும் பிரபல நடிகை

 

லண்டன்: பிரபல நடிகை ஹெலன் பிளானகன் தனது காதல் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். ‘கொரோனேஷன் ஸ்ட்ரீட்’ என்ற டிவி தொடரின் நடிகை ஹெலன் பிளானகன் (35) என்பவர், தனது 19 வயது முதல் 32 வயது வரை பிரபல கால்பந்து வீரர் ஸ்காட் சின்க்லேயர் என்பவருடன் 13 ஆண்டுகள் குடும்பம் நடத்தினார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு இந்த ஜோடி பிரிந்தது. தொடர்ந்து, 2023ம் ஆண்டு இறுதியில் டேவிட் ஹே என்பவருடன் ஹெலன் பிளானகன் சில காலம் கள்ளக்காதலில் இருந்தார்.

பின்னர் முன்னாள் கால்பந்து வீரர் ராபி டால்போட் என்பவரை காதலித்து வந்த நிலையில், அந்த உறவும் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. தற்போது தனியாக வசித்து வரும் ஹெலன் பிளானகன், இன்றைய கால கட்டத்தில் ஒரு சரியான துணையை தேடி கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘நடிகையாக இருப்பதால் சாதாரண மனிதர்களைப் போல என்னால் பொது இடங்களில் சுதந்திரமாக யாரையும் சந்திக்க முடிவதில்லை. என்னை சந்திப்பவர்கள் ‘நடிகை ஹெலன்’ என்று தான் பார்க்கிறார்களே தவிர, ஒரு தனி மனிதராக என்னைப் புரிந்து கொள்ள முன்வருவதில்லை. சிலர் எனது புகழைப் பயன்படுத்தி ஆதாயம் தேட நினைக்கிறார்கள். இதனால் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறேன்.

கடந்த காலங்களில் கால்பந்து வீரர்களுடன் பழகிய அனுபவத்தை வைத்துப் பார்க்கும்போது, இனிமேல் கால்பந்து வீரர்களை காதலிக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். எனது மன நலனுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் ஒருவரைத் தேடி வருகிறேன். அதேபோல், ஒரு உறவுமுறை எனக்கு முழு திருப்தியையும் நம்பிக்கையையும் தரும் வரை, எனது குழந்தைகளிடம் அந்த நபரை அறிமுகப்படுத்தப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

Tags : London ,Helen Blankan ,
× RELATED அமெரிக்க அதிபர் பதவி முடிந்த பிறகு...