×

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் சத்திரிய சான்றோர் படை தலைவர் ஹரி நாடார் வேட்புமனு நிராகரிப்பு

 

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் சத்திரிய சான்றோர் படை தலைவர் ஹரி நாடார் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹரி நாடார் சிறையில் இருந்து முகவர் மூலம் வேட்புமனு தாக்கல் செய்தது செல்லாது என தேர்தல் அலுவலர் அறிவிப்பு. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளத்தில் ஹரி நாடார் போட்டியிட்டு 37,726 வாக்குகளை பெற்றிருந்தார். ஆலங்குளம் தொகுதியில் பனங்காட்டுப் படை கட்சித் தலைவர் ராக்கெட் ராஜா வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ராஜாவுக்கு முன்மொழிந்தவர்களில் ஒருவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் பிழையோடு இருந்ததால் நிராகரிப்பு

Tags : Kshatriya Sannor Band ,Hari Nadar ,Alankulam ,Tenkasi ,Tenkasi district ,
× RELATED தமிழ் வருடப்பிறப்பு, விஷு பண்டிகையை...