×

பூமியை குளிர வைக்கும் பூச்சொரிதல்

*பூச்சொரிதல் என்னும் விழா, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெறும் மிகப் பிரசித்தி பெற்ற திருவிழா வாகும்.
*மக்களின் நலன் வேண்டி, சமயபுரம் மாரியம்மன் 28 நாட்கள் பச்சைப் பட்டினி விரதம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில்தான் இந்த பூச்சொரிதல் விழா நடைபெறுகின்றன.
*“பூச்சொரிதல்” என்பது ரோஜா, மல்லி, செம்பருத்தி என பல வகை மலர்களைக் கொண்டு, அம்மனுக்கு பொழியும் வழிபாட்டு முறையாகும்.
*இதனால், மலர்கள் சூழ்ந்து சமயபுரத்தாள் மிக அழகாக காணப்படுவார். இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைவார்கள்.
*அது மட்டுமா… சமயபுரம் கோயில் வளாகம் முழுவதும், வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
*அன்றைய தினம், பூக்கள் மணம் சூழ்ந்த ஆன்மிக தலமாக சமயபுரம் காணப்படும்.
*லட்சக் கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசிப்பது இதன் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
*குறிப்பாக, குடும்பம் நலன் மற்றும் வளம் பெற, கடும் விரதமுறைகளை மேற்கொண்டு, பெண்கள் அதிகளவில் கலந்து கொள்வார்கள்.
*பக்தர்கள் நேரடியாக மலர்களை கொண்டு வந்து சமர்ப்பிப்பது முக்கிய மரபாக பார்க்கப்படுகிறது.
*அம்மனுக்கு அதிகாலை முதலே சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். அதே போல், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
*இத்திருவிழாவில் கலந்து கொண்டால், நோய்கள் நீங்கி, வேண்டுவது நிறைவேறும் என்பது ஐதீகம்.
*மாசி மாதக் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி, 28 நாட்களுக்கு அதாவது பங்குனி மாதம் முழுவதும் இவ்விழா நடைபெறும்.
*ஆங்காங்கு, பக்தி பாடல்களும் ஒலித்தவாறு இருக்கும். அதோடு, பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.
*வெளி மாநில பக்தர்களும் பூச்சொரிதல் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
*அன்றைய தினம் திருச்சி முழுவதிலும் மழை பொழியும். பூமியே குளிர்ந்து காணப்படும்.
*சமயபுரத்தாள் மீது நம்பிக்கை மற்றும் பக்தியை மேலும் வலுப்பெறும் திருநாளாகும்.
*சமயபுரம் மாரியம்மன், திருச்சியின் எல்லைப்பகுதியில் கோயில் கொண்டு, பக்தர்களை காத்து வருகிறாள்.
*திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே, காவிரியின் வடகரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது.

Tags : earth ,Puchoridal ,Samayapuram Mariyamman Temple ,Samayapuram Mariyamman ,
× RELATED ஹர்ஷ யோகம்!