×

ஒன்றிய அரசை கண்டித்து போராட தீர்மானம்

 

பழநி, ஏப். 7: பழநியில் வங்கி ஊழியர் சங்கத்தின் தாலுகா மாநாடு நடந்தது. சங்க தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொது செயலாளர் அருணாச்சலம் சிறப்புரையாற்றினார். மாநாட்டில் பொது துறை வங்கிகள் பொது துறை வங்கிகளாகவே தொடர வேண்டும். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர் விரோத சட்டங்களை அமல்படுத்த கூடாது. ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து போராடுவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் சுரேந்திரன் நன்றி கூறினார்.

 

 

Tags : Union government ,Palani ,taluka conference ,Bank ,Association ,president ,Srinivasan ,general secretary ,Tamil Nadu Bank Employees Association ,Arunachalam ,
× RELATED நித்திரவிளை அருகே வாகன சோதனையில் ரூ.2.25 லட்சம் சிக்கியது