×

புதுக்கோட்டை பழைய பாலப்பகுதியை இரட்டை வழித்தட பாலமாக மாற்ற நடவடிக்கை

தூத்துக்குடி, ஏப். 7: புதுக்கோட்டை பழைய பாலம் இரட்டை வழித்தட பாலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயம் உறுதியளித்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயம், தூத்துக்குடி மத்திய ஒன்றியத்துக்குட்பட்ட குமாரகிரி, சேர்வைகாரன்மடம் ஊராட்சிகளுக்குட்பட்ட புதுக்கோட்டை, சிறுபாடு, சவேரியார்புரம், கூட்டாம்புளி, குலையன்கரிசல், சேர்வைகாரன்மடம், சிவஞானபுரம், தங்கம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.மேலும் சேர்வைகாரன்மடத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அப்பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், திமுக அளித்துள்ள தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன், கதாநாயகியாக விளங்கி வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும், இல்லத்தரசிகளுக்கு வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்கிக் கொள்ள ரூ.8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். இதனைக் கொண்டு பெண்கள் தாங்கள் விரும்பும் பொருளை விரும்பும் கடையில் வாங்கிக் கொள்ளலாம். ஓட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் தார் சாலை, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஏற்கனவே செயல்படுத்தியுள்ள திட்டங்கள் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. எங்களை முதலமைச்சரின் முகமாகவே மக்கள் பார்க்கின்றனர்.

ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்கவும், அனைத்து பகுதிகளுக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் பாடுபடுவேன். புதுக்கோட்டை ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்லும் வகையில் புதுக்கோட்டை பழைய பாலத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிதாக இரட்டை வழித்தட பாலம் அமைக்கும் நடவடிக்கை எடுப்பேன், என்றார். பிரசாரத்தில் மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல்மாலிக், மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார் ரூபன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் ரகுராமன், பூங்குமார், வீரபாகு, சுரேஷ், மீனாட்சி, மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, அவைத்தலைவர் பாலசுந்தரம், துணை செயலாளர்கள் ராஜ்குமார், ஏஞ்சலின் ஜெனிட்டா, பொருளாளர் ரமேஷ் விஜயகுமார், விவசாய சங்க தலைவர் ஜெகன், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜன், செல்வின், மாவட்ட சிறுபான்மை அணி ராஜாஸ்டாலின், தொண்டரணி துணை அமைப்பாளர் காபிரியேல் சைமன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் செல்வின் ஜெயக்குமார், ஒன்றிய அணி நிர்வாகிகள் சண்முகநாராயணன், சற்குணம், மணிகண்டன், வரலட்சுமி, விஜயபாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pudukkottai ,Thoothukudi ,DMK ,Ottapidaram ,Ramajayam ,Kumaragiri ,Servaikaranmadam ,Thoothukudi Central Union… ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழு அறை