×

ராயபுரம் அ.தி.மு.க வேட்பாளர் டி.ஜெயக்குமார் தீவிர ஓட்டு வேட்டை: ‘’18 ஆயிரம் பேருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தேன்’’

சென்னை: ராயபுரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டி.ஜெயக்குமார் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டார். வழி நெடுகிலும் ஆண்களும் பெண்களும் திரண்டு நின்று வரவேற்றனர். ‘இந்த தங்க முகத்தை பார்த்தால் போதும் தானா ஓட்டு விழும்’ என்று பெண்களும் ஆண்களும் நடனம் ஆடியும் அவருக்கு வரவேற்பு அளித்தனர். மாடிகளில் நின்று பெண்கள் பூக்களை அள்ளி தூவி ஆதரவை தெரிவித்தனர். வாக்காளர்கள் மத்தியில் டி.ஜெயக்குமார் பேசும்போது, ‘’1991-ல் என்னை நீங்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்தபோது இங்கு நிறைய குடிசைகள் இருந்தன.

அவை அடிக்கடி தீப்பற்றி வீடுகளில் இருந்த ரொக்க பணம் உடைமைகள் எரிந்து போய்விடும். 40 வருடங்களாக யாருமே இந்த கஷ்டத்துக்கு தீர்வு காணவில்லை. ஆனால் நான் அதிகாரிகளை அழைத்து குடிசைகளை அகற்றி விட்டு எல்லோருக்கும் வீடு கட்டிக் கொடுத்தேன். இப்போது அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள். இந்த வீடுகள் அம்மாவின் ஆட்சியில் ஜெயக்குமார் கட்டிய வீடுகள்.

என்னை நீங்கள் தேர்வு செய்தால் நிறைய பேருக்கு முன்பு போல் தொடர்ந்து நலத்திட்டங்கள் கொடுப்பேன. மீன் பிடி தடை காலத்துக்கு ரூ.12 ஆயிரம் கொடுப்போம். கடல் தொழில் செய்யும்போது இறந்தால் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும். மீன் பிடி படகுகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்கப்படும். இப்படி நிறைய திட்டங்கள் உள்ளது. அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் எல்லோருக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். எனவே இரட்டை இலைக்கு வாக்களித்து மகத்தான வெற்றியை அ.தி.மு.கவுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.’’என்றார்.

Tags : Rayapuram A. ,Thu. M. Nominee D. JAYAKUMAR ,Chennai ,Rayapuram Block A. ,
× RELATED சீமானுக்கு விருந்து வைத்து விபூதி...