ராணிப்பேட்டை தொகுதியில் அமைச்சர் காந்தியே மீண்டும் போட்டியிடுகிறார். காந்தியின் மகன் வினோத் காந்தி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தந்தையின் விருப்பத்தை கருத்தில் கொண்டு தான் போட்டியிடப் போவதில்லை என வினோத் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அமைச்சர் காந்தி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார்.
