×

திருவாரூர் வேலை வாய்ப்பு மையத்தில் ரயில்வே குரூப் டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

திருவாரூர், ஏப். 6: ரயில்வே துறையின் குரூப் டி தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வரும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயில்வே தேர்வு வாரியம் மூலம் குரூப் டி பணிக்கு 21 ஆயிரத்து 997 (சென்னை மட்டும்- ஆயிரத்து 36) காலிப்பணிடங்களுங்கான, அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டுவரும், தன்னார்வ பயிலும், வட்டம் மூலமாக இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதால் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகல், குடும்ப அட்டை, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அணுகி பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Tags : Tiruvarur Employment Centre ,Tiruvarur ,Mohanachandran ,Railway Department ,Office ,
× RELATED நித்திரவிளை அருகே வாகன சோதனையில் ரூ.2.25 லட்சம் சிக்கியது