×

திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களிள் பேரமைப்பு ஆலோசனை கூட்டம்

திருத்துறைப்பூண்டி, ஏப். 6: திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களிள் பேரமைப்பு சார்பில் திருவாரூரில் அடுத்த மாதம் (மே) 5ம் தேதி நடைபெறும் 43வது வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களிள் பேரமைப்பு தஞ்சை மண்டல தலைவர் செந்தில்நாதன், திருவாரூர் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் ஆதப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களிள் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு மே 5-ல் நடைபெறும் மாநாட்டில் திரளான வணிகர்கள் கலந்து கொள்வது, மாநாட்டு நுழைவு வாயில் முன்பு திருத்துறைப்பூண்டி மறைந்த முன்னாள் தலைவர் நடராஜன் பெயரும் மாநாட்டு உள் அரங்கத்திற்கு வேதாரண்யம் மறைந்த முன்னாள் தலைவர் சிவசுந்தரம் பெயர் வைப்பது என்று அறிவித்தார். கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்க செயலாளர் நாராயணமூர்த்தி, பொருளாளர் தினகரன், துணை தலைவர் மன்சூர், துணை செயலாளர் தணிகாசலம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Tamil Nadu Traders Associations’ Federation ,Thiruthuraipoondi ,43rd Traders’ Awareness Conference ,Thiruvarur ,Thiruthuraipoondi Trade Association Building ,
× RELATED நித்திரவிளை அருகே வாகன சோதனையில் ரூ.2.25 லட்சம் சிக்கியது