தஞ்சாவூர், ஏப். 6: தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நாளன்று நியமனம் செய்யப்படவுள்ள நுண் பார்வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், வாக்குப்பதிவு எதிர்வரும் 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு வாக்குப்பதிவு நாளன்று பதட்டமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்களாக (Micro-Observer) நியமனம் செய்யப்பட உள்ளவர்களுக்கு தொகுதி வாரியாக தேர்வு செய்திட குலுக்கல் முறையிலான தேர்வு தஞ்சாவூர் மாவட்டத்திற்கான 4 தேர்தல் பொது பார்வையாளர்களின் முன்னிலையில் தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரால், தேர்தல் கணிணி அறையில் நடத்தப்பட்டது.
இத்தேர்வில் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் தொடர்புடைய அலுவலர்களால் நடத்தப்பட்டது. மேற்காணும் பயிற்சி வகுப்பானது மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் பயிற்சி மேலாண்மை தொடர்பு அலுவலர்கள் ஆகியோரால் ஆய்வு செய்யப்பட்டது.
