×

திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

திருக்காட்டுப்பள்ளி, ஏப்.5: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாவின் நிறைவாக ஸ்ரீசுப்பிரமணியசுவாமி வள்ளி, தேவசேனா திருமணம் திருக்கல்யாண நிகழ்வாக நடைபெறும்.

நிகழாண்டு, திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு சனிக்கிழமை காலை மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து புதுவஸ்த்திரம் சாற்றி, புஷ்ப அலங்காரம் செய்து திருக்கல்யாண வைபவம் தொடங்கியது. சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு வள்ளி, தேவசேனா திருக்கல்யாணத்தை செம்மேனிநாத சிவாச்சாரியார், விவேகானந்தசிவம், ராஜராஜேஸ்வரன் ஆகியோர் நடத்தி வைத்தனர். இதில், திரளான முருக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 

Tags : Thirukkattupalli Murugan Temple ,Thirukkattupalli ,Sri Thandayuthapani Swamy Temple ,Thanjavur district ,Panguni Uttara festival ,Sri ,Subramaniaswamy ,Valli ,Devasena ,Thirukkattupalli… ,
× RELATED நித்திரவிளை அருகே வாகன சோதனையில் ரூ.2.25 லட்சம் சிக்கியது