×

கறம்பக்குடி அருகே கடலை கொடிகள் எரிந்து சேதம்

கறம்பக்குடி, ஏப். 5: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மட்டங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் விவசாயி இவரது வீட்டின் அருகே கடலைக் கொடியை குமித்து வைத்துள்ளார். நேற்று மதியம் திடீரென்று கடலைக் கொடி தீ பற்றி எரிந்துள்ளது. உடனடியாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு நிலை அலுவலர் பொறுப்பு பாபில்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டு இருந்த கடலைக் கொடியை அனைத்துனார். இருந்தும் கடலைக் கொடி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.

 

Tags : Karambakudi ,Govindaraj ,Mattangal ,Pudukkottai district ,Karambakudi fire department… ,
× RELATED நித்திரவிளை அருகே வாகன சோதனையில் ரூ.2.25 லட்சம் சிக்கியது