காபூல்: ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 9.50க்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் பஞ்சாப், ஜம்மு-காஷ்மீரில் பல இடங்களில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
