நன்றி குங்குமம் தோழி
*வெப்பக்காற்று வெளியேறும் வகையில் டி.வி.யின் பின்பக்கம் துளைகள் இருக்கும். அதற்கும் சுவருக்கும் இடையே இடைவெளி இருக்கும்படி தொலைக்காட்சிப் பெட்டியை வைக்க வேண்டும். துணி அல்லது பிளாஸ்டிக் கொண்டு மூடினால் அதிலும் பின்பக்கம் சிறு துளைகள் இட்டு சூடான காற்று வெளியேற வழி செய்ய வேண்டும்.
*தொலைக்காட்சிப் பெட்டியில் மின் அழுத்தம் கூடுதல் குறைவை சரி செய்யும் ஸ்டெபிலைசரை டிவியுடன் பொருத்தப்பட்டுள்ளதா என கேட்டு அறிய வேண்டும். இல்லையெனில் தனியே ஸ்டெபிலைசர் வாங்கிப் பொருத்தி வைக்க வேண்டும்.
*தொலைக்காட்சி இயங்கும் போது அதை அசைக்கவோ, தூக்கவோ கூடாது. சிறு அதிர்வும் பல விளைவுகளை ஏற்படுத்தும்.
*டி.வி பெட்டியை துடைக்கும் போதும் இடம் மாற்றும் போதும் மின் இணைப்பை துண்டித்து விட வேண்டும்.
*படம் தெளிவில்லாமலும், ஒளிச்சிதறலும் இருந்தால் டி.வியைக் கொஞ்ச நேரம் நிறுத்தி வைத்துப் பின் போட வேண்டும். இல்லை என்றால் டி.வி எந்த நிறுவனத்தை சார்ந்ததோ அங்கு தொலைபேசி மூலம் புகார் அளிக்கலாம்.
*டி.வியை நிறுத்தும் போது முதலில் ஒளி அளவு ஸ்விட்சையும், பின் மின் இணைப்பு ஸ்விட்சையும் நிறுத்த வேண்டும். சூடு ஆற கொஞ்ச நேரம் காத்திருந்த பின்பே துணி கொண்டு மூட வேண்டும்.
*டி.விக்கு வரும் லைனில் மிக அதிக மின் அழுத்தமுள்ள வெட்டிங், மோட்டார், மிக்ஸி, அயர்ன் பாக்ஸ் இணைப்புகள் இருக்கக் கூடாது.
*பராமரிப்பு, பழுது பார்ப்பு முதலியவைகளை தொழில் தெரிந்த அங்கீகரிக்கப்பட்டவர்களை கொண்டே செய்ய வேண்டும்.
*டி.வி தன் பார்வை மட்டத்தில் இருக்கும்படி உட்கார வேண்டும். டி.விக்கும் பார்ப்பவருக்கும் இடையே குறைந்தது 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்.
தொகுப்பு: டி.லதா, நீலகிரி.
