×

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து: உரிய நேரத்தில் அணைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு

சென்னை: சென்னை வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் இமைந்துள்ளது. 8 மாடி கொண்ட கட்டிடத்தில் 2வது தளத்தில் மத்திய குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவு இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் இந்த அலுவலகத்தில் இருந்து கரும்பு புகை வெளியேறியது. இதை பார்த்த காவலர்கள் அதிர்ச்சியடைந்து உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். மேலும், காலையில் பணிக்கு வந்த காவலர்கள் அலறி அடித்து கொண்டு 8 மாடி கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

பின்னர் தகவலின் படி வேப்பேரி பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கமிஷனர் அலுவலகத்தின் 2வது மாடியில் பிடித்த தீயை அணைத்தனர். மேலும் மற்ற தளங்களுக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இருந்தாலும் அலுவலகத்தில் இருந்த கணினி, நாற்காலிகள், மேசை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து குறித்து வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மின் அழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. இருந்தாலும் போலீசார் தீ விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தால் சிறிது நேரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Chennai Police Commissioner ,Chennai ,Vaporieral ,Central Crime Branch ,
× RELATED சென்னை வரும் பிரதமர் மோடி, இந்த...