சென்னை: புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை உள்பட 3 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளதால் பயனிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை உள்பட 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல விமானங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், கொச்சி, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் நேற்று பல மடங்கு உயர்ந்தது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.6,503 ஆக இருந்த நிலையில், நேற்று ரூ.17,021க்கு விற்பனையானது. சென்னை- மதுரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,467. தற்போதைய கட்டணம் ரூ.13,147. திருச்சிக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.4,521. தற்போதைய கட்டணம் ரூ.5,615, கோவைக்கு சாதாரண கட்டணம் ரூ.4,966. தற்போதைய கட்டணம் ரூ.16,496. சேலத்திற்கு சாதாரண கட்டணம் ரூ.4,088. தற்போதைய கட்டணம் ரூ.5,051, கொச்சிக்கு சாதாரண கட்டணம் ரூ.4,840. தற்போதைய கட்டணம் ரூ.18,071, பெங்களூருக்கு சாதாரண கட்டணம் ரூ.3,071. தற்போதைய கட்டணம் ரூ.16,496, ஐதராபாத் சாதாரண கட்டணம் ரூ.4,779. தற்போதைய கட்டணம் ரூ.19,453.
இவ்வாறு உள்நாட்டு விமான கட்டணங்கள், சர்வதேச விமான கட்டணங்கள் அளவுக்கு, பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
