சென்னை: திமுக தலைமையிலான நல்லாட்சி மீண்டும் அமைவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார். எம்.எல்.ஏ.வாக இருந்து பணியாற்றியதை விட இன்னும் வீரியத்துடன் அரசியல் களமாடுவேன்.எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பதை வைத்து வலைதளங்களில் பல்வேறு கருத்துகளில் விவாதம் நடப்பதை அறிவேன். என் மீது அன்பு கொண்டு ஆதரவு கருத்து பரிமாறிய தோழர்களுக்கு நன்றி. ஒரு கட்சியில் யாருக்கு, எப்போது, எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது தலைமையின் முடிவாகும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
