×

கந்தர்வகோட்டை பகுதியில் மிளகாய் சாகுபடியில் பூச்சிக்கொல்லி ஸ்பிரே செய்யும் விவசாயிகள்

கந்தர்வகோட்டை, ஏப். 1: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதி விவசாய தொழில் சார்ந்த பகுதி ஆகும். இங்கு உள்ள விவசாயிகள் வாழை, தென்னை, கரும்பு, நெல், கடலை, மிளகாய் போன்ற பயிர் செய்து வருகிறார். இப்பகுதியில் எந்த ஆற்று பாசனம் மற்றும் போதிய மழை இல்லை என்றாலும் தமிழ்நாடு அரசு மின்சாரத்துறை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலையில்லா மும்முறை மின்சாரம் வழங்கி வருகிறது.

அதனை பயன்படுத்தி கொண்டு ஆழ்துளை கிணற்றில் உதவியாள் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். பயிர்செய்து உள்ள மிளகாய் செடியில் பூச்சிகளை தாக்கி வருவதால் அதனை ஒழிக்க பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் ஸ்பிரேயர் செய்து வருகிறார்கள்.

 

Tags : Kandarvakottai ,Pudukkottai district ,
× RELATED பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி...