- கந்தர்வகோட்டை
- ராமன்
- நாரங்கியன்பட்டி
- வேலன்
- சின்னப்பா
- பாபடியாயன்பட்டி கிராமம்
- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை
- தாலுகா அலுவலகம்…
கந்தர்வகோட்டை, ஏப். 1: கந்தர்வகோட்டை அருகே உள்ள நரங்கியன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமன். தனது மோட்டார் சைக்கிளில் அவரது நண்பர் பாப்படையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேலன் மகன் சின்னப்பா(65) என்பவருடன் சென்று கொண்டிருந்தனர். கந்தர்வகோட்டை- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கல்லுகாரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆசிர்வாதம் மகன் துரை மாணிக்கம்(50) என்பவர் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் ராமன் மோட்டார் சைக்கிள் பின்புறம் மோதி உள்ளது.
இதில் மோட்டார் சைக்கிள் பின்புறம் அமர்ந்திருந்த சின்னப்பா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் இறந்தார். தகவல் அறிந்து வந்த கந்தர்வகோட்டை போலீசார் சின்னப்பாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
