×

இரவில் 270 டிரோன்கள் ஏவியது; உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்: 5 பேர் பலி, 13 பேர் படுகாயம்

 

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இரவில் 270 டிரோன்கள் ஏவியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைன் மீது தனது தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு ரஷ்யாவின் ஒடேசா மற்றும் மத்திய உக்ரைனில் உள்ள போல்டாவா பகுதிகளில் ரஷ்யா தொடர்ச்சியாக டிரோன்களை ஏவியது. இந்த தாக்குதல்களில் 5 பேர் பலியானார்கள். 13 பேர் படுகாயமடைந்தனர்.

உக்ரைன் விமான படை கூறுகையில், இரவு நேரத்தில் ரஷ்யா 273 டிரோன்களை ஏவியது. இதில்,252 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன என தெரிவித்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு சென்றுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட் அதிபரை சந்தித்து டிரோன் தடுப்பு முறைகள் குறித்து அவர் பேசி வரும் வேளையில், இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Tags : Russia ,Kiev ,Ukraine ,Odessa ,central Ukraine… ,
× RELATED துபாயில் அமைந்துள்ள உக்ரைன் நாட்டின்...