×

ஜென் இசட் போராட்டத்தில் 70 பேர் பலி; நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது

 

காத்மண்டு: நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி நேற்று கைது செய்யப்பட்டார். நேபாளத்தில் கடந்த ஆண்டு ஜென் இசட் இயக்கப் போராட்டங்கள் வெடித்தது. போராட்டத்தின்போது சுமார் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உட்பட சுமார் 76 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான சம்பவங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் உள்ளிட்டோர் மீது குற்றவியல் பிரிவுகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது.

இந்நிலையில் புதிதாக பிரதமராக பொறுப்பேற்ற பாலேந்திர ஷா தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டத்தில் விசாரணை ஆணையம் அளித்த பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமரும் சிபிஎன்-யூஎம்எல் கட்சியின் தலைவருமான சர்மா ஒலி பக்தபூர் மாவட்டத்தின் குண்டு பகுதியில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.மேலும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கக் கதுன்ஜே பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார்.

Tags : Gen Z protests ,Nepal ,Sharma Oli ,Kathmandu ,Prime Minister Sharma Oli ,Gen Z ,
× RELATED துபாயில் அமைந்துள்ள உக்ரைன் நாட்டின்...