×

கோத்தகிரி பகுதிகளில் பனிக்காலத்திற்குப்பின் பசுமைக்கு மாறிய தேயிலை தோட்டங்கள்

கோத்தகிரி : கோத்தகிரி பகுதிகளில் பனிக்காலத்திற்கு பிறகு தேயிலை தோட்டங்கள் பசுமைக்கு மாறின. கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கீழ் கோத்தகிரி, ஒன்னட்டி, கொடநாடு, சோலூர்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் நிலவிய உறைபனி மற்றும் நீர்பனி காரணமாக தேயிலை தோட்டங்களில் செடிகள் கருகி பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

பகல் நேரத்தில் நிலவிய அதிக வெயிலின் தாக்கத்தாலும், இரவு நேரங்களில் நிலவிய பனியின் தாக்கத்தாலும் தேயிலைச்செடிகள் கருகி மகசூல் பாதிப்படைந்தது.தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதி வரை பனியின் தாக்கம் இருந்து வந்ததால் மகசூல் குறைந்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஓரிரு நாட்கள் பணிக்கு செல்லக்கூடிய நிலையும் இருந்து வந்தது.

தற்போது காலநிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டு பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் இருந்தாலும், பனிக்காலங்களில் பாதிக்கப்பட்ட தேயிலைச்செடிகள் மீண்டும் பசுமைக்கு மாற ஆரம்பித்துள்ளது. இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலத்தில் மழை பெய்தால் பசுமை மாறாமல் தேயிலைச்செடிகள் அதிக மகசூல் தரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Kotagiri ,Lower Kotagiri ,Onnatti ,Kodanad ,Solurmattam ,
× RELATED திமுக கூட்டணியில் போட்டியிடும்...