- அஇஅதிமுக
- அமீனா
- பாஜக
- வர்த்தகர்களின் லீக்
- காசி முத்து மானிக்கம்
- சென்னை
- திமுக வர்த்தகர்கள் லீக்
- விருகம்பாக்கம்…
சென்னை: காவிக்கு பின் சென்று காலியாகும் அதிமுக, பாஜவை நம்பி சென்றால் ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும், பாஜ புகுந்த வீடும் ஒன்று தான் என்று திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசி முத்துமாணிக்கம் கூறினார்.
சென்னை, விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் பகுதி செயலாளர்கள் ராசா, கண்ணன் தலைமையில், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் திமுக வர்த்தக அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் பேசியதாவது: அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் முடி சூட்டிக்கொண்ட, அனைவராலும் பாராட்டப்பட்ட பியூஷ் கோயல் யார் எனில், ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் நடந்தபோது, பியூஷ் கோயல் அப்போது ஒன்றிய மின்சார துறை அமைச்சராக இருந்தார். அப்போது பியூஷ் கோயல் கூறினார், ”நான் பலமுறை இங்கு இருக்கும் முதல்வரையும், தமிழக மின்சார துறை அமைச்சரையும் அழைக்கிறேன், போனில் கூட யாரும் வரவில்லை, ஒன்றியத்தை இதற்கு மேல் அசிங்கப்படுத்த முடியாது” என்றார்.
அன்று அ.தி.மு.க.வை கழுவி கழுவி ஊற்றிய பியூஸ் கோயலைத் தான் இன்று அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் உட்கார வைத்துக் கொண்டு உச்சி முகர்ந்து, பொன்னாடை பூங்கொத்து கொடுக்கிறார்கள். வெட்கமாக இல்லையா?.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு தந்திருக்கிறது. பொய் சொன்னதற்காக தமிழக மக்களிடம் எடப்பாடி மன்னிப்பு கேட்க வேண்டாமா?. கொரோனா மணி அடித்தால் போகும், விளக்கு ஏற்றினால் போகும் என பொய் சொல்லும் பா.ஜ. ரபேலில் நாற்பதாயிரம் கோடி ஊழல் என்று கூறினால் நீதிமன்றத்தில் கோப்பு தொலைந்து விட்டது என பொய் கூறும் பாஜ ஏழரை லட்சம் கோடி பா.ஜ. ஊழல் என சி.ஏ.ஜி. அறிக்கை கூறினால் நடவடிக்கை எடுக்காமல் ஊழல் சொன்ன அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கும் பா.ஜ.. இன்று அபாண்டகரமாக பொய் கூறியுள்ளது.
இந்தியை திணிப்பதற்காக எந்த மாநிலத்தையும் பாஜ விரட்டவில்லை என்று ஒன்றிய துணை கல்வித்துறை அமைச்சர் ஜெயின் சவுத்ரி கூறுகிறார். அப்படி என்றால் தரவேண்டிய 3,500 கோடி எங்கே? மலை என்றால் இமயமலை, மலர் என்றால் மல்லிகை மலர் என்பது போல, பொய் என்றால் எடப்பாடியும் மோடியும் தான், தமிழக அரசியல் வானில் ஒரு தேர்தலில் ”கட்சி”, ”சின்னத்தை” மீறி ”தலைவனுக்காக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்காக” வாக்கு குவியும் புதுமையான தேர்தல், வாக்கு கேட்கும் தேர்தல் அல்ல, வருகின்ற வாக்கை வாக்குப் பெட்டியில் சேர்க்கின்ற தேர்தல், முப்பது நாளும் கண் மூடாது உழைப்போம் -தமிழகத்தை வடக்கர்களிடமிருந்து காப்போம்.
காவிக்கு பின் சென்று காலியாகும் அதிமுக இன்று பாண்டி நாளை தமிழகத்தில் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி பிடிக்கும் முன்பே 1974ல் ராமசாமி தலைமையில் முதல்வராக பாண்டியில் கோலேச்சியது. அதன் பின் 1977ல் ராமச்சந்திரன் தலைமையில் ஆட்சி அமைந்தது. பிறகு கூட்டணி அரசிலும் அதிமுகவிற்கு பங்கு இருந்தது. 2011-ல் 5 சட்டமன்ற உறுப்பினர், 2016ல் தனித்து நின்று 4 சட்டமன்ற உறுப்பினர் வென்ற கட்சி, இந்த 2026 தேர்தலில் நிற்கும் போதே அதிமுகவிற்கு இரண்டே இரண்டு இடம்தான்.
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த போலி லாட்டரி மார்ட்டின் மகன் லட்சிய ஜனநாயக கட்சிக்கு இரண்டு இடமாம், லட்சிய ஜனநாயக கட்சியும் அதிமுகவும் ஒன்றா? கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக அதிமுக இன்று பாண்டியில் நாளை தமிழகத்தில் பாஜகவை நம்பி சென்றால் ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும், பா.ஜ.க. புகுந்த வீடும் ஒன்று தான், ஒரிசாவில் பிஜு பட்நாயக், பீகாரில் நிதிஷ்குமார், மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே, பாண்டியில் இனி அதிமுக, நாளை தமிழகத்தில் எடப்பாடியும், அதிமுகவும். இவ்வாறு காசிமுத்து மாணிக்கம் கூறினார். கூட்டத்தில் தனசேகரன், பிரபாகரராஜா, சசிகுமார், கனிமொழி தனசேகரன், நிஷா தங்கராஜ், முருகேசன், குணசேகரன்ன், லோகு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
