×

இரும்பை – ஸ்ரீ மகா காளீஸ்வர், மதுசுந்தர நாயகி

மகிரிஷி ஒருவரால் காளிரூபம் கொண்ட இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்திற்கு மாகாளம் என்று பெயர். வடக்கில் உஜ்ஜயினி ஒரு மாகாளம் தெற்கில் அம்பர் ஒரு மாகாளம் இதற்கு நடுவில் இரும்பை ஒரு மாகாளம் ஆகும். இந்த திருத்தலம் அமைந்திருக்கும் பகுதியில் நிலம் வறண்டு போனது. மக்கள் அனைவரும் மன்னரிடம் முறையிடவே மந்திரியிடம் ஆலோசனை கேட்க, மந்திரி கோயிலுக்கு அருகில் உள்ள அரச மரத்தின் இலைகளை மட்டுமே உணவாக உண்டு வந்த சித்தர் அந்த அரசமரத்தின் கீழே பல வருடங்களாக தலைகீழாக தவத்தில் இருக்கிறார். அவரிடம் வறட்சி நீங்க வழி கேட்கலாம் என மந்திரி யோசனை சொன்னார்…

மன்னனும் மக்களும் சித்தரை காணச் சென்றார்கள். தவத்தில் அமர்ந்திருந்த சித்தரை கலைப்பதற்கு யாரும் முன்வரவில்லை. எனவே, மன்னன் சித்தரின் தவத்தை கலைத்தால் நிலமான்யம் அளிக்கப்படும் என்று கூறவே, அங்குள்ள திருத்தலத்தில் வள்ளி என்ற நடனமாடும் பெண் சித்தரின் தவத்தை கலைப்பதற்கு முன்வந்தாள். சித்தர் அவ்வப்போது கீழே இருக்கும் இலைகளை உண்பதை கவனித்தாள். ஆதலால், இலைகளுக்குப் பதில் உப்பு கலந்த பொரித்த அப்பளங்களை அங்கு வைத்தாள். அதனை உண்ட சித்தர் கண் விழித்தார். ஏன் எனக்கு இந்த அப்பளங்களை கொடுத்தாய் என வள்ளியிடம் கேட்டார். உங்களின் தவத்தின் காரணமாக வெப்பம் அதிகமாகி இந்த ஊரின் சுற்றுப்புறங்கள் எல்லாம் வறண்டு போய்விட்டன. மக்களும் உயிரினங்களும் நீரின்றி தவிக்கின்றன என்றாள் வள்ளி. அச்சமயம் தவம் கலைந்து வெப்பம் குறைந்து மழை பெய்யத் தொடங்கியது.

ஆலயத்தில் வள்ளியின் நடன நிகழ்ச்சி நடந்தது. அச்சமயம் அவளின் காலில் இருந்த சலங்கை அவிழ்ந்து விடவே அதை எடுத்து அவளின் காலில் கட்டினார் சித்தர். இதனை அந்த ஊர்மக்கள் ஒரு சித்தர் பெண்ணை தொடலாமா என கேட்கவே, கோபம்கொண்ட சித்தர் கருவறையில் இருந்த லிங்கத் திருமேனியை கோபமாய் வெடித்தார் கோயிலில் உள்ள அந்த திருமேனி மூன்றாக வெடித்து விழுந்தது. புல் பூண்டு முளைக்காத இடமாக இருந்தது. தன் தவறை உணர்ந்த மக்கள் சித்தரிடம் மன்னிப்பு கேட்டனர். பின்பு மூன்று பாகங்களாக இருந்த லிங்கமே இன்றும் மூலவர் சந்நதியில் உள்ளது. இவரைத்தான் எல்லோரும் கடுவெளிச் சித்தர் என்று அழைத்தார்கள்.

இங்குள்ள தெய்வங்களுக்கு சூரியன், சுக்கிரன், குரு, சனி மற்றும் கேது ஆகிய கிரகங்கள் நாமாகரணம் செய்துள்ளன.
*பௌர்ணமி நாளில் பச்சரிசி ஊற வைத்து அந்த நீரினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, பின்பு அந்த அரிசியில் நைவேத்யம் செய்து அதனை வீட்டில் மஞ்சள்துணியில் வைத்தால் வீட்டில் தனம், தானியம் வளரும். அபிஷேகம் செய்த நீரை விவசாய பூமியில் தெளித்தால் விவசாயத்தில் நல்ல செழிப்பு உண்டாகும்.
*இந்த திருத்தலத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில் இங்குள்ள சுவாமியையும் கடுவெளிச் சித்தரையும் வழிபட்டு சலங்கை தானம் செய்தால் நாட்டியத் துறையில் மிகுந்த புகழை அடைவார்கள்.
* ஜாதகத்தில் 12ல் ராகு – ேகது இருந்தால் இந்த திருத்தலத்திற்கு ஞாயிற்றுக் கிழமை ராகு காலத்தில் பார்லி அரிசியை நைவேத்யம் செய்து வழிபட்டு அதனை அங்குள்ளவர்களுக்கு பிரசாதமாக கொடுத்தால் சர்ப்ப தோஷத்தில் இருந்து விலகுவார்கள்.
*ஜாதகத்தில் குரு – சுக்ர மூடம் என்ற தோஷம் பெற்றவர்கள், சுவாமிக்கு வெள்ளெருக்கு மாலை கொடுத்து வழிபட்டால், குரு – சுக்ர தோஷம் விலகி திருமண வாழ்வில் சந்தோஷம் பெறுவார்கள். இந்த திருத்தலமானது ஜோதிர் லிங்கத்திற்கு ஈடான திருத்தலமாக உள்ளது என்பது சிறப்பு.
*புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் (10 கி.மீ.,) திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் இருக்கிறது.

Tags : Sri Maha Kalishwar ,Madusundara Nayagi ,Mahalam ,Ujjain ,amber ,
× RELATED ஜாலியாகச் சுற்றுபவரா? வேலை செய்பவரா?