×

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,08,800க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,08,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையில் நேற்று ஒரே நாளில் 2 முறை மாற்றம் காணப்பட்டது. காலையில் பவுனுக்கு ரூ.2720 குறைந்து, மாலையில் ரூ.2 ஆயிரம் அதிகரித்தது. அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையே நடைபெற்று வந்த போர் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் திடீரென அறிவித்தார். போர் நிறுத்தம் அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நிமிடமே, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. அதாவது யாரும் எதிர்பார்க்காத வகையிலும், எப்போதும் இல்லாத அளவுக்கு 3வது முறையாக மாலையில் தங்கம் விலையில் மாற்றம் காணப்பட்டது.

அதாவது தங்கம் பவுனுக்கு ரூ.670 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,340க்கும், பவுனுக்கு ரூ.5,360 உயர்ந்து ஒரு பவுன் 1 லட்சத்து 6,720க்கு விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையானது. இந்த திடீர் விலையேற்றம் நகை வாங்குவோரை மீண்டும் கலக்கமடைய செய்தது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்தது. அதாவது நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.340 குறைந்து ஒரு கிராம் ரூ.13,000க்கும், பவுனுக்கு ரூ.2,720 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

அதேபோல் வெள்ளியின் விலையும் காலையில் குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.240க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2.40 லட்சத்துக்கும் விற்பனையானது. இந்த விலை குறைவு என்பது சில மணி நேரம் தான் நீடித்தது. மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.250 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13250க்கும், பவுனுக்கு ரூ.2000 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்னையானது. இதே போல மாலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் உயர்ந்து பார் வெள்ளி ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையானது. தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது நகை வாங்குவோரை சற்று கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,08,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.13,600க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராம் ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 260க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,USA ,Israel ,Iran ,
× RELATED மார்ச்- 25: பெட்ரோல் விலை 100.84, டீசல் விலை 92.39-க்கு விற்பனை!