×

நெல்லை மாவட்டத்தில் 75 இடங்களில் நேரடி நிலையங்கள் நெல் கொள்முதல் புகார்களை கண்காணிக்க சிறப்புக்குழு

நெல்லை : அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் கடந்த அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பிசான நெல் சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை செய்து வருகின்றனர்.

இந்த அறுவடை நெல்லை கொள்முதல் செய்வதற்கு 75 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 44 கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாகவும், 31 கொள்முதல் நிலையங்கள் இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மூலமாகவும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்ய சிறப்பு கண்காணிப்புக் குழு அமைத்து கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் மற்றும் வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்கள் சார்ந்த அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து கலெக்டர் சுகுமார் கூறியிருப்பதாவது:

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எழும் புகார்களை தெரிவிக்க மாவட்ட அளவில் மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் திருநெல்வேலி -9443695551, மண்டல மேலாளர், இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் 93456 04043 மற்றும் இந்திய தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம், சென்னை ஒருங்கிணைப்பாளர் 93457 58933 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

தாலுகா அளவில் நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அம்பாசமுத்திரம் தாலுகா – நுகர்பொருள் வாணிபக்கழக கொள்முதல் அலுவலர் பிரகாஷ்- 81227 45119, இளையராஜா 97895 48321, நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் கொள்முதல் அலுவலர் பிரவீன் 93445 69946,

வேளாண்மை உதவி இயக்குநர்-73732 32525, சேரன்மகாதேவி தாலுகா கொள்முதல் அலுவலர் பிரகாஷ் மேற்கூறிய எண்ணிலும், நுகர்வோர் கூட்டமைப்பு கொள்முதல் அலுவலர் கார்த்திக் 90251 14946, வேளாண்மை உதவி இயக்குநர்கள், சேரன்மகாதேவி -89039 25406, பாப்பாக்குடி -94435 40426, நெல்லை, மானூர் தாலுகா – நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் அலுவலர் சபரிதேவி – 80563 50661, நுகர்வோர் கூட்டமைப்பு கொள்முதல் அலுவலர் கார்த்திக் மேற்கூறிய எண்ணிலும், வேளாண்மை அலுவலர்,

மானூர் -97872 41421, பாளையங்கோட்டை தாலுகா கொள்முதல் அலுவலர்கள் அண்ணாதுரை – 97646 1066, சதிஷ் குமார் – 78714 28740, வேளாண்மை உதவி இயக்குநர், பாளையங்கோட்டை-75981 57321, நாங்குநேரி தாலுகா கொள்முதல் அலுவலர்கள் ரமேஷ் – 97505 17065, கார்த்திக் மேற்கூறிய எண்ணிலும், வேளாண்மை உதவி இயக்குநர், நாங்குநேரி -94455 20273, வேளாண்மை உதவி இயக்குநர், களக்காடு -63694 94481, ராதாபுரம் தாலுகா கொள்முதல் அலுவலர்கள் ரமேஷ் மேற்கூறிய எண்ணிலும், வேளாண்மை உதவி இயக்குநர்கள், ராதாபுரம் -94867 57429, வள்ளியூர் -97506 82505 ஆகிய எண்களில் அலுவலர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் நெல் கொள்முதல் தொடர்பாக விவசாயிகள் புகார் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 599 3540 மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய துறை உயர் அலுவலர்களின் அலைபேசி எண்கள் கொண்ட அறிவிப்பு பதாகையும் புகார் பெட்டியும் ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நெல் கொள்முதல் பணி நிறைவடையும் வரை, வாரத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், குழு ஆய்வின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரி செய்யவும் கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொள்முதல் தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : Nellai district ,Nellai ,Collector ,Sukumar ,
× RELATED 300 மின்சார சிற்றுந்துகள்: ஒப்பந்தம் கோரிய சென்னை மாநகர போக்குவரத்து கழகம்