×

குளச்சல் குடியிருப்பு பகுதியில் இரவில் கம்புடன் சுற்றும் முகமூடி ஆசாமி

குளச்சல் : குளச்சல் அருகே சைமன் காலனி யூதா காலனி ஆகிய பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மர்ம நபர் ஒருவர் முகத்தை கர்ப்சிப்பால் மூடி கையில் கம்புடன் ஒவ்வொரு வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து செல்லும் காட்சி அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகி உள்ளது.சுமார் 5 வீடுகளின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்ததாக கூறப்படுகிறது.

அப்போது தேவாலயத்திற்கு சென்ற ஒருவர், மர்ம ஆசாமியை பார்த்ததும், ‘யார் நீ’ என்று கேட்டவுடன் அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.தற்போது சி.சி.டி.வி.கேமராவில் பதிவான காட்சி, சமூக இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.சைமன்காலனி, யூதா காலனியில் மர்ம நபர் கர்ச்சீப்பால் முகத்தை மூடி கையில் கம்புடன் சுற்றித்திரியும் சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Kulachal ,Simon Colony ,Judah Colony ,
× RELATED 300 மின்சார சிற்றுந்துகள்: ஒப்பந்தம் கோரிய சென்னை மாநகர போக்குவரத்து கழகம்