- வேளாங்கண்ணி
- சித்தன்னவாசல்
- நாகப்பட்டினம்
- வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம்
- லெண்ட்
- கிரிஸ்துவர்
நாகப்பட்டினம் : தொடர் விடுமுறை காரணமாக வேளாங்கண்ணியில் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு நேற்று குவிந்தனர்.புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலம் தொடங்கி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 19ம்தேதி முதல் தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் தமிழக மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் குடும்பத்தோடு ஆரோக்கிய அன்னையை வழிபாடு செய்தனர்.
தவக்காலம் என்பதால் சிலர் விரதம் இருந்து குடும்பத்தோடு வருகை தந்து ஆரோக்கிய அன்னைக்கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் வழிபாடு செய்தனர். சிலுவை பாதையில் மண்டியிட்டு நடந்து தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றினர். வேளாங்கண்ணி பழைய மாதா கோவில், நடுத்திட்டு, கடை தெரு, கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வேளாங்கண்ணி கடற்கரையில் குடும்பத்தோடு நின்று செல்பி எடுத்தனர். வெயிலில் தாக்கத்தை தாக்கு பிடிக்க முடியாமல் கடலில் குளித்தும் மகிழ்ந்தனர்.புதுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ மணப்பாறை சாலையில் சித்தன்னவாசல் சுற்றுலா ஸ்தலம் உள்ளது. இங்குள்ள சமணர் படுக்கை உலக புகழ்பெற்ற குகை ஓவியம் புகழ் பெற்றது. இது தென்னிந்தியாவின் அஜந்தா என்று அழைக்கப்படுகிறது.
இங்கு 7ம் நூற்றாண்டு ஓவியங்கள் மிகவும் பிரபலம், சமண முனிவர்கள் படுக்கைகள் மற்றும் கல் வெட்டுகள் உள்ளனர். இவை இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் இங்கு மரங்கள் சிற்பங்கள் மற்றும் பொம்மைகளுடன் அமைக்கபட்ட பூங்கா, சிறுவர் விளைாடி மகிழ்ந்தும், படகு குழாம் சுற்றுலாபயனிகள் மகிழும் வண்ணம் அமைந்திருந்து என்று சுற்றுலா பயனிகள் கூறினர்.
யுகாதி வருட பிறப்பு, ரம்ஜான் பண்டிகை விடுமுறை என்பதால் புதுக்கோட்டை, மணப்பாறை. திருச்சி, தேவகோட்டை, விராலிமலை உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வாகனங்களில் குடும்பம் குடும்பமாக வருகை புரிந்தனர். உலக பிரசித்தி பெற்ற மலைமேல் உள்ள சமணர் படுக்கை, குகை ஓவியம் ஆகியவற்றை பார்த்து விட்டு பூங்கரகளில் சுற்றி பார்த்து ரசித்தனர். மேலும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சில சுற்றுலா பயணிகள் காலைகுடும்பத்துடன் வந்து நாள் முழுவதும் பூங்காகள் மற்றும் மழை சூழ்ந்த இயற்கை அழகை கண்டு ரசித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் முதல் அனைவரும் பூங்காக்களில் இருந்த சிலைகள் மற்றும் பொம்மைகளில் அருகில் இருந்து புகைபடம் எடுத்து கொண்டனர்.
இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தேவகோட்டை பகுதியில் இருந்து வானத்தில் குடும்பமாக வந்த சுற்றுலா பயணிகள் பூங்காவில் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ந்தனர்.
சிறுவர்கள் விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சல் போன்றவைகளில் ஆடி விளையாடி மகிழ்ந்தனர். மைதானத்தில் சிறுவர் சிறுமியர்கள் விளையாட விளையாட்டு பொழுதுபோக்கு கட்டமைப்புகள் கூடுதலாக அமைத்து மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு எதிர்பார்த்துள்ளனர்.
