×

ராயக்கோட்டை பகுதியில் வேளாண் கருவிகள் உற்பத்தியில் வடமாநில தொழிலாளர்கள் தீவிரம்

ராயக்கோட்டை : ராயக்கோட்டை பகுதியில் வேளாண் கருவிகள் உற்பத்தியில் வட மாநில தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவற்றை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.ராயக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

விவசாயிகள் தரிசாக போட்டிருந்த நிலங்களிலும், விவசாய பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக நிலத்தில் வளர்ந்துள்ள செடிகளை வெட்டி அகற்றுதல், நிலத்தை சமன்படுத்துதல், முள் புதர்களை அற்றுதல், கரையமைத்தல், நிலத்திற்கு தழை சத்து அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தீவிரமாக செய்து வருகின்றனர்.

இப்பணிகளை மேற்கொள்ள விவசாய கருவிகள் தேவைப்படுகிறது. இதையொட்டி ராயக்கோட்டையில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் முகாமிட்டு, சாலையோரத்தில் கூடாரம் அமைத்து விவசாயத்திற்கு தேவைப்படும் மண்வெட்டி, அரிவாள், கடப்பாரை, கதிர் அளிவாள், கோடாலி உள்ளிட்ட பல்வேறு இரும்பிலான விவசாய கருவிகளை, இரும்பை உருக்கி புதிதாக தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

அவற்றை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.இது குறித்து வட மாநில தொழிலாளர்கள் கூறுகையில், `குடும்பத்துடன் விவசாயத்திற்கு பயன்படும் இரும்பிலான உழவு கருவிகளை செய்து கொடுப்பதற்காக பிழைப்பு தேடி வந்துள்ளோம்.

எங்களிடம் ரூ.100 முதல் ரூ.500 வரையிலான விவசாய உபகரணங்கள் விலைக்கு கிடைக்கும். கிராமங்கள் தோறும் சென்று விவசாயத்திற்கு தேவையான கருவிகளை செய்து விற்பனை செய்து வருகிறோம்,’ என்றனர்.

Tags : NORTHERN STATE ,RAYAKOTTA ,NORTH STATE ,Rayakot ,
× RELATED செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில்...