சென்னை: தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று பவுனுக்கு ரூ.2,640 குறைந்தது. இதேபோல வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் சரிந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை திடீரென உயர்ந்தது. அதாவது நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,950க்கும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,11,600க்கும் விற்பனையானது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்த விலை உயர்வு என்பது ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று மீண்டும் தங்கம் விலை குறைந்தது. அதுவும் வாரத்தின் இறுதிநாளில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலை அதிரடி சரிவை சந்தித்தது.
அதாவது, கிராமுக்கு ரூ.330 குறைந்து ஒரு கிராம் ரூ.13,620க்கும், பவுனுக்கு ரூ.2,640 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 8,960க்கும் விற்பனை ஆனது. இதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.250க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை (திங்கட்கிழமை) மார்க்கெட் தொடங்கிய பின்னரே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.
