×

ஆரோக்கியத்துக்கு உதவும் கல்பாசி!

நன்றி குங்குமம் டாக்டர்

பூமியில் ஆயிரக்கணக்கான செடி, கொடிகளை இயற்கை நமக்கு கொடுத்திருக்கிறது. நோய், நொடியில்லாம் நம்மை காக்கும் இந்த மூலிகைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது. அந்தவகையில் கல்பாசியும் ஒன்று. கல்பாசி என்பது பாறைகள் மற்றும் மரக் கிளைகளில் பற்றி படர்ந்து வளரும் ஒருவகை பாசி மற்றும் பூஞ்சை இணைந்து வாழும் கூட்டுயிரி ஆகும். இதற்கு லைக்கன் என்று பெயர்.

கூட்டு இலை போன்ற கட்டமைப்புகளில் ( லோப்கள்) மென்மையான, வட்டமான அல்லது முனை விளிம்புகளுடன், பெரும்பாலும் ஒன்றுடன் ஒன்று இணைந்து தோன்றும். உலரும்போது கடினமாகவும் காகிதம் போலவும் இருக்கும், ஊறவைத்தால் அல்லது சமைத்தால் மென்மையாக மாறிவிடும். கல்பாசி லேசான மணத்திலும், சமைக்கும்போது வலுவான நறுமணத்தைத் தரும் தன்மை கொண்டது.

பொதுவாக ஈரப்பதமான காடுகளில், குறிப்பாக இமயமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மரங்கள், பாறைகள் மற்றும் கற்களில் வளரும், அதன் உலர்ந்த, சிதைந்த மற்றும் சுருள் தோற்றத்தால் அடையாளம் காணப்படுகிறது. உண்ணக்கூடியதாகும். இதில் மேற்பரப்பு பழுப்பு நிறத்தில் இருக்கும். அடிப்பகுதி வெள்ளை, சாம்பல் நிறத்தில் இருக்கும். பர்மோட்ரெமா பெர்லாட்டம் என்ற தாவரவியல் பெயரைக் கொண்டது.

நம் நாட்டில் அசைவ சமையலில் மிக முக்கிய மசாலா பொருட்களில் ஒன்றாக இந்த கல்பாசி உள்ளது. உணவை செரிக்க உதவும் என்பதாலும், இறைச்சியை மென்மையானதாக்கும் என்பதாலும் கல்பாசி அசைவ சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இது பாரம்பரியமாக சிறுநீரக கற்கள், சுவாசப் பிரச்னைகள் மற்றும் வலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கவும். வயிற்றுப் பிரச்னைகளைத் தணிக்கவும் உதவும் என்று அறியப்படுகிறது.

கல்பாசியின் முக்கிய மருத்துவ குணங்கள் ஏராளம், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடல்லாமல் செரிமான தூண்டுதலுக்கும் நல்ல ஊக்கியமாக செயல்படுகிறது. வீக்கத்தை குறைக்கிறது. இது மூட்டு வலி மற்றும் கீல்வாதத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். சுவாசப் பிரச்னைகள், இருமல், ஜலதோஷம் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளைத் தணிக்க உதவுகிறது. ஏனெனில் இது இயற்கையான உமிழ்வு மருந்தாக உள்ளது.

Tags : Nature ,earth ,
× RELATED விஜய் தேவரகொண்டா ஃபிட்னெஸ்!