×

பறவை காய்ச்சல் பரவிவருவதால் சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மூடல்!!

சென்னை: பறவை காய்ச்சல் பரவி வருவதால் சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா மூடப்பட்டது. பறவை காய்ச்சல் காரணமாக சிறுவர் பூங்காவில் 20க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்தன. கரண்டிவாயன், கூழைக்கடா, செங்கால் நாரை உள்ளிட்ட நாரைகள், கொக்குகள் உயிரிழந்துள்ளது. சென்னையின் முக்கிய பகுதியில் உள்ள பூங்காவுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருவது வழக்கம். 2 மாதங்களுக்கு முன்பிருந்தே சென்னையில் காகங்கள் உயிரிழந்து வருகின்றன. சென்னையில் பறவை காய்ச்சல் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது.

கடந்த சில நாட்களாகவே வரிசையாக நாள் ஒன்றுக்கு நான்கிலிருந்து ஐந்து பறவைகள் வரிசையாக உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்ததாக பறவை காய்ச்சல் இருக்குமோ என்றும் அச்சத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ளது. பறவைகளின் எச்சம், அதன் பாகங்கள், இறக்கைகள், முடிகள் உள்ளிட்டவை மூலம் வைரஸ் கிருமி மக்களுக்கு தொற்றும் என்பதால் பூங்கா மூடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பறவைகள் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு பறவை காய்ச்சல் காரணமா என்பது பரிசோதனை மேற்கொள்வதற்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வரக்கூடிய பார்வையாளர்களுக்கு நோய் தோற்று பரவாமல் இருப்பதற்காகவும் மற்றும் அங்கிருக்கக்கூடிய விலங்குகள், பறவைகளுக்கு, நோய் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காகவும் பாதுகாப்பு காரணமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : park ,Guindy, Chennai ,bird flu outbreak ,Chennai ,Guindy, ,
× RELATED சென்னை எழும்பூரில் நடைபெறும்...