- முதல்வர்
- எம். க.
- ஸ்டாலின்
- புதுச்சேரி
- எம். எல். ஏ. அங்கலன்
- திமுகவில்
- சென்னை
- அங்கலான்
- புதுச்சேரி திருப்புவான்
- NR காங்கிரஸ்
- பாஜக
சென்னை: புதுச்சேரி திருபுவனை (தனி) தொகுதியில் கடந்த பொதுத்தேர்தலில் என்ஆர் காங்கிரசில் சீட் கிடைக்காத விரக்தியில் சுயேச்சையாக போட்டியிட்ட அங்காளன் வெற்றிபெற்றார். அதன்பிறகு பாஜ ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த அவர் தொடர்ந்து சட்டப்பேரவையில் என்ஆர் காங்கிரசுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தார். புதுச்சேரியில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் திமுக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இந்நிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகத்ரட்சன் எம்பியுடன் சென்னை சென்ற அங்காளன் எம்எல்ஏ, நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதேபோல் ராஜ்பவன் தொகுதி மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணனும் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இருவருக்கும் திமுக சால்வை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். வரும் பொதுத்தேர்தலில் இருவரும் ேபாட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
பின்னர் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் கூறுகையில், புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. விரைவில் அது முடிந்துவிடும். புதுவையில் யார் தலைமை என்பதை எங்கள் தலைவர் தான் முடிவு செய்வார். மேலும் அதிக தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து தலைமையிடம் தெரிவித்துள்ளோம். அனைத்தையும் தலைவர் முடிவு செய்வார் என்றார். அப்போது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, புதுச்சேரி மாநில திமுக ஒருங்கிணைப்பாளரும், கொள்கை பரப்புச் செயலாளருமான ஜெகத்ரட்சகன் எம்பி, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் சிவா ஆகியோர் உடனிருந்தனர்.
