- ரம்சன் விழா
- திமுகா
- சென்னை
- பொது செயலாளர்
- Duraimurugan
- ரம்ஜான் திருவிழா
- தமிழ்நாடு சட்டமன்றம்
- பொது தேர்தல்
சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை நடைபெறுவதாக இருந்த வேட்பாளர்கள் நேர்காணல் வரும் 23ம் தேதிக்கு மாற்றம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் ஏற்கனவே 21ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த மாவட்டங்கள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஒத்திவைக்கப்பட்டு வரும் 23ம் தேதி திங்கள்கிழமை அன்று நடைபெறும். அதன்படி வரும் 23ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு, தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய, பெரம்பலூர், அரியலூர் தொகுதி மாவட்ட வேட்பாளர்களுக்கும், மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை வடக்கு, தெற்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்ட வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
