×

அதிமுக மாஜி அமைச்சரின் அருவருக்க தக்க ஆபாச பேச்சு: சிவி சண்முகத்துக்கு நெட்டிசன்கள் சாட்டையடி

 

அதிமுக மாஜி அமைச்சரும், எம்பியுமான சிவி சண்முகம் தொடர்ந்து பெண்கள் குறித்து சர்ச்சையான ஆபாச கருத்துக்களை பேசி வருகிறார். விழுப்புரத்தில் மகளிருக்கு பாதுகாப்பு கேட்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர், முதலமைச்சர் உங்க கனவ சொல்லுங்க என்கிறார். எனக்கு நயன்தாரா வேண்டும், கொடுப்பாரா? என கேட்டார். அவரது அருவருக்கத்தக்க ஆபாச பேச்சை மகளிர், திரையுலக பிரபலங்கள் மற்றும் பெண் அரசியல் கட்சித் தலைவர்கள் வன்மையாக கண்டிக்கவே உடனே வழக்கம்போல வருத்தம் தெரிவித்தார் சி.வி.சண்முகம். அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுகவிலே கண்டனக் குரல் எதிரொலிக்க தொடங்கி உள்ளது.

இதனிடையே சி.வி சண்முகம் எம்பி பேச்சுக்கு நயன்தாராவே பதிலடி கொடுப்பதுபோல் அவர் நடித்த “அறம்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தை நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். அந்த படத்தில் கலெக்டர் கேரக்டரில் நடித்திருக்கும் நயன்தாரா, அரசியல்வாதிகளுக்கு எதிராக தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒருகட்டத்தில் மக்களுக்காக தனது பதவியை தூக்கி எறிந்து அரசியல்வாதிகளை எதிர்த்து போராடுவார்.

அப்போது அவர் பேசிய ஜனநாயக நாடுன்னு நம்பி ஓட்டுபோட்ட பாவப்பட்ட மக்களுக்கும், இந்த மக்களுக்கு முன்னாடி இருக்கும் இந்த மாதிரியான பாதாள சாக்கடைகளைத்தான்(சி.வி.சண்முகம் போன்றோர்) முதலில் மூடணும் என்ற வசனத்தை பதிவிட்டுள்ளனர். தற்போது வாட்ஸ்அப், இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. நெட்டிசன்களும் சிவி சண்முகத்தின் தொடர் சர்ச்சை பேச்சுகளை பதிவிட்டு கலாய்த்து வருகின்றனர்.

Tags : Minister ,Immaculate Magic ,Shivaji Sanmuhat ,Adimuka Maji ,Shivi Sanmugham ,Vilupura ,Chief Minister ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...