×

பேட் கம்மின்ஸ் சிகிச்சை பெறுவதால் சன்ரைசர்ஸ் கேப்டனாக இஷான் கிஷண் நியமனம்

 

ஐதராபாத்: ஐபிஎல்லில் ஆடிவரும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் ரசிகர்களின் பேராதரவுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், இந்தாண்டு வரும் 28ம் தேதி துவங்க உள்ளன. பெங்களூரு நகரில் நடக்கும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் முன்னணி ஆல் ரவுண்டர் பேட் கம்மின்ஸ் காயம் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

அதனால், துவக்க போட்டிகள் சிலவற்றில் அவர் ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பேட் கம்மின்ஸுக்கு மாற்றாக, சன்ரைசர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் அதிரடி வீரர் இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார். பேட் கம்மின்ஸ் மீண்டும் அணியில் சேரும் வரை, இஷான் கிஷன் கேப்டனாக செயல்படுவார் என சன்ரசைர்ஸ் ஐதராபாத் அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் துணை கேப்டனாக அபிஷேக் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : Ishan Kishan ,Sunrisers ,Bat Cummins ,Hyderabad ,Adi Sunrisers Hyderabad ,IPL ,India ,Bengaluru ,
× RELATED ஓர்லியான்ஸ் பேட்மின்டன் ஆயுஷிடம் வீழ்ந்த கிரண்