×

சார்… உங்க கட்சிப்பெயர் என்னன்னு சொல்லுங்க

 

புதுச்சேரி அதிமுக பிரமுகராக இருந்தவர் நேரு. 2006ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் உருளையன்பேட்டை தொகுதியில் இவருக்கு சீட் ஒதுக்காததால் அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் மனித நேய மக்கள் சேவை இயக்கத்தை தொடங்கி நடத்தி வந்த அவர், 2011 தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார்.

அடுத்த நடந்த 2016 தேர்தலில் தோல்வியடைந்த அவர், மீண்டும் 2021 தேர்தலில் வெற்றி பெற்றார். இவர், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். கடந்த தேர்தலில் பாஜவுடன் ரங்கசாமி கூட்டணி வைத்து ஆட்சி நடத்தி வந்ததால், அவருக்கு ஆதரவு என்ற நிலையில் இருந்து விலகி அவரது ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தார். மேலும், அதிரடியாக திடீர் திடீரென சட்டசபை முன்பு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வந்ததால் தடாலடி சுயேச்சை எம்எல்ஏ என்ற பெயரை பெற்றார்.

தற்போது இவர் புது கட்சியை தொடங்கினார். அதாவது நமது மக்கள் கழகம் என தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவுக்கு அனுப்பினார். ஏற்கனவே ஒருவர் பதிவு செய்து உள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து நேயம் மக்கள் கழகம் என மாற்றி கொண்டார். ஆனால் இவரது வீட்டில், ஆபீசில் நமது மக்கள் கழகம் என உள்ளது. லட்டர் பேடில் நேயம் மக்கள் கழகம் என அறிக்கை வெளியிடுவதால் எம்எல்ஏ இப்படி குழப்பலாமா என ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags : Nehru ,Puducherry AIADMK ,Urulayanpet ,2006 assembly elections ,Humanity People's ,Service ,Movement ,
× RELATED முதல்வரின் சிறப்பான ஆட்சியால்...