×

தவெக மாவட்டச் செயலாளர்களுடன் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை மாவட்டச் செயலாளர்களை தூண்டிவிட்ட அதிமுக: கேள்வி எழுப்பும் அரசியல் விமர்சகர்கள்

சென்னை: தமிழக வெற்றிக கழகம் தொடங்கியது முதல் அக்கட்சித் தலைவர் விஜய் தொடர்ச்சியாக பாஜவைத் தனது கொள்கை எதிரி எனக் கூறிவந்தாலும் தற்போதுவரை, பெரிய அளவில் பாஜவை விமர்சிக்காமல் தவிர்த்து வருகிறார். கரூர் கூட்ட நெரிசல் விபத்து வழக்கில் ஏற்கனவே இரண்டு முறை விஜயை அழைத்து சிபிஐ விசாரித்த நிலையில் மீண்டும் நாளை ஆஜராக விஜய்க்கு சம்மன் வழங்கியுள்ளது சிபிஐ. மேலும், விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்காததன் காரணமாகத் தற்போது வரை படம் வெளியாகமல் உள்ளது.

இந்த நடவடிக்கைகள் மூலமாக விஜய்க்கு அழுத்தம் கொடுத்துத் தவெகவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இழுக்க பாஜக முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. தொடக்கத்தில், பாஜக நிர்வாகிகள் திமுகவை எதிர்ப்பவர்கள் ஒரே அணியில் இருந்தால், அது திமுகவை வீழ்த்த உதவும் என்று கருத்துக்களைப் பகிர்ந்து வந்தார்கள். சில மாதங்களாக அந்தக் குரல்கள் பெரிய அளவில் வெளிப்படவில்லை. ஆனால், கடந்த வாரம் ஆந்திரத் துணை முதல்வர் பவன் கல்யாண் நேரடியாக விஜயைத் தொடர்புகொண்டு தேஜ கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகக் கூறப்பட்டது.

மேலும், அமித்ஷா தரப்பு விஜயைக் கூட்டணிக்குக் கொண்டுவர முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், பாஜக தரப்பு கூட்டணிப் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை எனத் திட்டவட்டமாக மறுத்தது. அதேபோல், தவெக தரப்பிலும் நாங்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற எங்களின் நிலைப்பட்டில் உறுதியாக உள்ளோம் எனத் தெரிவித்தது. சில நாள்களுக்கு முன்பு செங்கோட்டையனும் யாருடனும் கூட்டணி இல்லை என்று தெரிவித்தார்.
ஆனால், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, கடலூர், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்கள் பேசும்போது, முன்னாள் அமைச்சர்கள் எங்களை சந்தித்தனர். அப்போது, அதிமுகவுடன், தவெக கூட்டணி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் இரு கட்சியினரும் தோற்பது உறுதி. அதனால், நடிகர் விஜய்யிடம் நாங்கள் பேச முடியாது. நீங்கள்தான் பேசி, கூட்டணிக்கு அவரை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விஜய்யின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவரது கோரிக்கையை சில மாவட்டச் செயலாளர்கள் ஆதரித்தனர். சில மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் தனித்தன்மையுடன் இருக்க வேண்டும். பாஜவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் காணாமல் போய்விட்டது. அதேபோல நாமும் காணாமல் போய்விடும். நம்மை காலி செய்யத்தான் அதிமுகவும், பாஜவும் திட்டமிடுகிறது. கூட்டணி வைத்தால் தேமுதிகவுக்கு ஏற்பட்ட நிலைதான் நமக்கும் ஏற்படும். நாம் எந்த காலத்திலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதனால், உங்கள் கருத்துக்களை விஜயிடம் தெரிவிப்பதாக புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.

மேலும், விஜய், நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோ அல்லது டெல்லி சிபிஐ விசாரணைக்கோ செல்லும்போது, குறிப்பிட்ட நாளின் காலை நேரம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுச் செல்வதுதான் வழக்கம். ஆனால், நாளை விஜய் டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டியுள்ளது. அதற்காக இன்றே விஜய் விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாகவே டெல்லி செல்வதன் பின்னணி என்ன என்ற கேள்வியை சிலர் எழுப்பி வருகின்றனர்.

Tags : AIADMK ,Tevag ,Chennai ,Tamil Nadu ,Vetrika Kazhagam ,Vijay ,BJP ,Karur ,
× RELATED மாம்பழச் சின்னம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் ராமதாஸ் மேல்முறையீடு