×

கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை கோரி வழக்கு தமிழக அரசு பதில்தர நோட்டீஸ்: உயர் நீதிமன்றம் உத்தரவு

 

சென்னை: தமிழகம் முழுவதும் கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சமீப காலமாக கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து குழந்தைகள், முதியோர் பாதிக்கப்பட்டுள்ளதால், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட கோரி கோட்டூர்புரத்தைச் சேர்ந்த விஜயராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், கொசுக்கள் பெருக்கம் காரணமாக மலேரியா, டெங்கு, சிக்கன் குன்யா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். மழைநீர் வடிகால்கள், காலியிடங்கள், கட்டுமான பகுதிகளில் தேங்கியிருக்கும் நீரால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது.

எனவே, மழைநீர் வடிகால்கள், காலியிடங்கள், கட்டுமான பகுதிகளில் தேங்கியிருக்கும் நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

Tags : Tamil Nadu government ,Chennai ,Madras High Court ,Tamil Nadu ,
× RELATED புதுச்சேரியில் நள்ளிரவு கேட் ஏறி...