×

3 மாநிலங்களில் 4 முஸ்லிம்கள் கொலை மதவெறுப்பு சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை தேவை: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

 

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: லக்னோ, பீகார், அரியானா பல இடங்களில் ஒரு வாரத்திற்குள் நான்கு முஸ்லிம்கள் வெறுப்புணர்வின் அடிப்படையில் கொல்லப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி மற்றும் கவலை அளிக்கின்றன.

நான்கு வெவ்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதித்த இந்த கொலைகள் பரவலான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரபட்சமற்ற வெளிப்படையான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மத அடையாளத்தின் பெயரில் மனிதர்களைக் குறிவைத்து நடைபெறும் இந்தக் கொடூரமான தாக்குதல்கள் நாட்டின் ஜனநாயகப் பண்புகளுக்கும், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை மதச்சார்பின்மை கொள்கைக்கும் நேரடி சவாலாகும்.

சமீப காலமாக நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் மீது வெறுப்பு தூண்டப்படும் சூழல் உருவாக்கப்பட்டு, அதன் விளைவாக இத்தகைய தாக்குதல்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்கிடமானதாகும். மத அடிப்படையிலான வெறுப்பு பரப்புரைகளையும், வெறுப்பு பேச்சுகளையும் தூண்டிவரும் சக்திகளுக்கு எதிராக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Jawahirullah ,Chennai ,Humanity People's Party ,Lucknow ,Bihar ,Haryana ,
× RELATED புதுச்சேரியில் நள்ளிரவு கேட் ஏறி...