திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியை ஒட்டி அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் மார்ச் 6, 7 தேதிகளில் விழுப்புரம் – நாகை இடையே சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு பகல் 1.05 மணிக்கு நாகை சென்றடையும்; மறுமார்க்கமாக பகல் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் எனக்கூறப்படுகிறது.
