×

ஐம்பது வயது எனும் முழுமை!

நன்றி குங்குமம் டாக்டர்

செவ்விது செவ்விது பெண்மை!

50க்கு மேல வாழ்க்கை கொஞ்சம் அமைதியா ஆகும். குழந்தைகள் தங்களோட பாதையில, வீடு சத்தம் குறைஞ்ச இடமா மாறும். அந்த அமைதியோட சேர்ந்து பெண்களின் மனசும் பேச ஆரம்பிக்கும்.லட்சுமி: எனக்கு இப்போல்லாம் ரொம்ப கோவமா வருது. சில நேரம் எல்லாரு கிட்டயும் நல்லா பேசுறேன், சில நேரம் திடீர்னு கோபம் வருது, அழுகை வருது. நான் என்ன யோசிக்குறேனே எனக்கே புரிய மாட்டேங்குது. முன்னாடி எல்லாம் நான் இப்படியில்லை. இப்போ ஏன் இப்படி ஆகுதுன்னு தெரியல. இதுக்கு என்ன காரணம் டாக்டர்?

டாக்டர்: நீங்க சொல்றது சரிதான் மா. 50 வயதுக்கு மேல ஆகும்போது பெண்களுக்கு நிறைய மாற்றங்கள் வரும். மெனோபாஸ் (Menopause) ஒரு காரணமா இருக்கலாம். அது மாத சுழற்சி (periods) நிக்குற விஷயம் மட்டும் இல்லை. உடலில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen hormone) அளவு குறையும். அதனால், அதனால் மூட் ஸ்விங்ஸ் (mood swings), எளிதில் கோபம், சில நேரம் காரணமே இல்லாத சோகம் இப்படித் தோணலாம்.

லட்சுமி: அப்போ அதுதான் போல… எனக்கு யார் கூடயும் பேச பிடிக்க மாட்டேங்குது. தனியா இருக்கணும்னு தோணுது. ஆனால் தனியா இருந்தாலும் நெறைய யோசிக்குறேன். சரியா தூக்கம் வரல. எதுமே பண்ண பிடிக்கல. எல்லாத்தையும் ரொம்ப பொறுமையா, கஷ்டப்பட்டு பண்ணுற மாதிரி இருக்கு. இதுவும் இதுனாலதானா?

டாக்டர்: இதெல்லாம் மனசு சோர்வடைய ஆரம்பிச்சதுக்கான (depression) அறிகுறிகள் மாதிரி தெரிகிறது. மெனோபாஸ் (Menopause) ஒரு காரணமா இருந்தாலும், அதை தாண்டி நீங்க பல விஷயங்களை உள்ளுக்குள்ள வச்சுக்கிட்டு அதிகமா யோசிச்சு கவலைப்படுறதும் இதுக்கு முக்கிய காரணமா இருக்கும். இதுல முதல்ல செய்ய வேண்டியது “இது என் குறை இல்ல”ன்னு நீங்களே உங்களை குறை சொல்லாதது.

லட்சுமி: அது சரிதான். கவலைன்னா ஒண்ணா ரெண்டா? ஏகப்பட்டது இருக்கு. இன்னும் கொஞ்ச வருஷத்துல ரிட்டயர்மென்ட். அப்பறம் நான் என்ன பண்ணப்போறேன்? வீட்லயே இருக்கணுமா, இல்ல வேற ஏதாவது பண்ணணுமா? அதுக்கப்பறம் வாழ்க்கை எப்படி? இப்படியெல்லாம் தோணுது. டாக்டர்: இந்த வயசுல எல்லாருக்குமே ரிட்டயர்மென்ட் பற்றி பயம் வரும். “அப்பறம் என் ரோல் என்ன?” “வாழ்க்கை எப்படி போகும்?” அப்படின்னு யோசனை வருவது சாதாரணம். ஆனால் இப்போவே முழுக்க எதிர்காலத்தை நினைச்சு கவலைப்படுறதால மனசு இன்னும் சோர்ந்து போகும். அதனால நாளை பத்தி யோசிக்காம, இன்றைக்கு மட்டும் வாழ பழகணும்.

லட்சுமி: வேலைக்குப் போனால் கவலை, வீட்டுக்கு வந்தால் தனிமை. வீட்டுல நானும் என் கணவரும்தான். பசங்க எல்லாம் படிச்சு வேலைக்குப் போயிட்டாங்க. அவங்களையும் சரியா பார்க்க முடியல. சின்ன வயசுல அம்மாஅப்பா, அப்பறம் கணவர், அவர் குடும்பம், குழந்தைகள், வேலைன்னு ஓடிட்டே இருந்தேன்.இப்போ நா எனக்காக என்ன பண்ணினேன்? எனக்குன்னு எதுவுமே இல்லையேன்னு ஒரு வெறுமை, ஒரு துக்கம். இதுக்கு என்ன பண்ணணும்னே தெரியல.

டாக்டர்: நீங்க சொல்றது ரொம்ப முக்கியமான விஷயம். இந்த வயசுல பல பெண்களுக்கு “நாம் தனிமை ஆகிட்டோமா?” “நமக்குன்னு எதுவுமே செய்யலையா?” ன்னு தோணும். இதைத்தான் எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்ன்னு (Empty Nest Syndrome) சொல்வாங்க. இது ஒரு வித மனச் சோர்வை உண்டாக்கும். இதுக்கு நீங்க செய்ய வேண்டியது: முழுக்க தனிமையா இருக்காம, உங்களை engaging-ஆ வச்சுக்குற விஷயங்களை மெதுவா உருவாக்குறது.

*தினமும் ஒருவரிடமாவது பேசுங்க
*நடைப்பயிற்சி, gardening மாதிரி activity
*பிடிச்ச hobby அல்லது புதுசா கத்துக்குறது
*தூக்கத்தை சரியா வச்சுக்குறது

இவையெல்லாம் மனசுக்கு மருந்து மாதிரி உங்கள இதுல இருந்து வெளிய கொண்டு வரும்.

லட்சுமி: வீட்டுல நானும் என் கணவரும்தான். ஆனால் சில நேரம் நாம ஒரே வீட்டுல இருந்தாலும் தனித்தனியா இருக்குற மாதிரி தோணுது. பேசுறது எல்லாம் ஒரே மாதிரியான விஷயமா மட்டும் இருக்கு.

டாக்டர்: இது இந்த வயசுல நிறைய தம்பதியர் அனுபவிக்குற விஷயம். பேசாத தனிமை.

மனசை இன்னும் கனமாக்கும். சின்ன சின்ன விஷயங்களை பகிரும் பழக்கத்துக்கு மெதுவாகத் திரும்ப வரணும்.

லட்சுமி: சில நேரம் என் வயசே எனக்கு பயமா இருக்கு. இப்போ நம்மள யாரும் கவனிக்க மாட்டாங்களோன்னு தோணுது.

டாக்டர்: அது வயதாவதின் அச்சம். இந்த வயசுல “நான் invisible ஆகிட்டேனா?” ன்னு மனசு கேள்வி கேக்கும். அது பலவீனம் இல்ல, மாற்றத்துக்கான பயம். ஆனா லட்சுமி, இந்த சோர்வு, வெறுமை, எதுவுமே பிடிக்காத உணர்வு 23 வாரத்துக்கும் மேல நீடிச்சா உதவி தேடுறது ரொம்ப நல்லது. மனநல உதவி எடுத்துக்கறது பலவீனம் இல்ல, அது உங்க மனசுக்குக் குடுக்குற பராமரிப்பு. “இந்த வயசுல பெண்கள் மனசு கேள்வி கேக்கும். அதை ஒதுக்காம கவனிச்சா, இந்த காலமும் வாழ்க்கையில ஒரு புதிய அர்த்தமா மாறும்.”

தொகுப்பு: மனநல மருத்துவர் மா. உஷா நந்தினி

Tags : Saffron ,Dr. ,Lakshmi ,
× RELATED காபியில் சிக்கரி… பயன் என்ன?