- இபிஎஸ்
- தஞ்சாவூர் தென் மாவட்டம் AIADMK
- சி. வி சேகர்
- சட்டமன்ற உறுப்பினர்
- பட்டுக்கோட்டை
- துரை செந்தில்
- மதுக்கூர் டவுன் பஞ்சாயத்
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் சி.வி.சேகர். பட்டுக்கோட்டை தொகுதி முன்னாள் எம்எல்ஏ. அமைப்பு செயலாளராக இருப்பவர் துரை செந்தில். மதுக்கூர் பேரூராட்சி தலைவராக உள்ளார். இருவருக்கும் எப்போதும் ஏழாம்பொருத்தம். கீரியும், பாம்புமாக செயல்பட்டு வரும் இவர்கள், பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட கட்சி தலைமையிடத்தில் விருப்ப மனு அளித்துள்ளனர். இதில் சி.வி.சேகருக்ேக யோகம் அடிக்கும் என்று கட்சிக்குள்ளே பேசிக்கிட்டாங்களாம்.
சேகருக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்தால், தலைமுறை தலைமுறையாக கட்சிக்காக வேலை பார்க்கும் நாங்கள் எல்லாம் எங்கே போவது. இந்த முறை எனக்கு சீட் வேண்டும். இதை மீறி சேகருக்கு சீட் கொடுத்தால் வெளிப்படையாகவே செயல்பட்டு நிச்சயம் அவரை தோற்கடிப்பேன் என்று எடப்பாடியை நேரில் சந்தித்து துரை செந்தில் சவால் விட்டு வந்துள்ளதாக கட்சிக்குள்ளே பரபரப்பாக பேசப்படுகிறது. பட்டுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவராக இருந்தவர் ஜவகர் பாபு. இவரும் பட்டுக்கோட்டை தொகுதிக்கு குறி வைத்துள்ளாராம்.
சேகர், செந்திலின் சண்டைக்கு மத்தியில் ஜவகர் பாபுவுக்கே சீட் கொடுத்து விடலாம் என நினைப்பில் தலைமை உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி பட்டுக்கோட்டை அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, சி.வி.சேகர் வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர். இந்த சமூகத்தை சேர்ந்த சிலரை, துரை செந்தில் வளைத்து போட்டுக்கொண்டு சேருக்கு எதிராக கொம்பு சீவி வருகிறார்.
இது தொகுதியில் பட்டவர்த்தனமாகவே தெரிகிறது. இந்த இருவரில் யாருக்கு சீட் கொடுத்தாலும், இன்னொருவர் உள்ளடி வேலைகளை நிச்சயம் பார்ப்பார். தலைமை என்ன முடிவு எடுக்கப்போகிறது என தெரியவில்லை. வெளிப்படையாக இவர்கள் போட்டுக்கொள்ளும் சண்டையை பார்த்தால் சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டை அதிமுகவை விட்டு கைநழுவி போவது கன்பார்ம் என்றே தெரிகிறது’ என்றனர்.
* ‘திமுகவை ஆதரித்து பிரசாரம்’
மதுரையில் மருதநாட்டு மக்கள் கட்சியின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் பனை.ராஜ்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில், தியாகி இமானுவேல்சேகரனின் பிறந்தநாளான அக்.9ல் அரசு விழாவாக அறிவித்து, பரமக்குடியில் மணிமண்டபம் அமைத்து கொடுத்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வது, மதசார்பின்மை, சமூகநீதியை நிலைநாட்ட செயல்படும் இந்தியா கூட்டணி மற்றும் கட்சிகளை ஆதரித்து செயல்படுவது, தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் மீண்டும் நல்லாட்சி செய்திட தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
