×

சொன்னாரு..! செஞ்சாரு..!! திருநங்கைகளுக்கு சுய தொழில்

சொன்னாரு: சமூகத்தில் மிகவும் நலிந்த நிலையில் உள்ள திருநங்கையர்களைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது திராவிட மாடலின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இதற்காக, 2021-22-ம் ஆண்டு முதல் திருநங்கையர் நல வாரியத்தின் மூலம் சுயதொழில் தொடங்குவோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மூலமாக ஆண்டுக்கு ஒரு கோடி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

செஞ்சாரு: முதல்வர் அறிவிப்பின்படி, ஒரு தனிநபர் சுயதொழில் தொடங்கத் தேவையான உபகரணங்கள் அல்லது மூலதனத்திற்காக அதிகபட்சமாக ரூ.50,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தைப் பயன்படுத்தி திருநங்கையர்கள் பல்வேறு சிறுதொழில்களைத் தொடங்கி நடத்தி வருகின்றனர். உதாரணமாக, மளிகைக் கடைகள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் அமைத்தல், ஆவின் பாலகங்கள் மற்றும் பால் பொருட்கள் விற்பனை,

தையல் இயந்திரங்கள் மூலம் ஆடை தயாரிப்பு நிலையங்கள் நடத்துதல், சரக்கு வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை வாங்கி இயக்குதல் போன்ற சுய தொழில்களை செய்து வருகின்றனர். தமிழக அரசின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் மூலம் திருநங்கையர்கள் யாசகம் கேட்பதோ அல்லது பிறரைச் சார்ந்திருப்பதையோ தவிர்த்து,

கண்ணியமான முறையில் தொழில் செய்து வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமூகத்தின் பார்வையில் விடுபட்டு இருக்கும் எங்களை அன்பால் அரவணைத்து சுயமாக தொழிலை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தமைக்காக முதல்வருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்வதாக திருநங்கைகள் சங்கம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

* 811 பேர் பயன்
கடந்த 2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை 811 பயனாளிகளுக்கு திருநங்கை நல வாரியம் மூலமாக சுய தொழில் தொடங்க நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

* சமூக பாதுகாப்பு திட்ட சலுகைகள்
* சுயதொழில் மானியம் மட்டுமின்றி ஆதரவற்ற திருநங்கையருக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.1,000-லிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
* கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திருநங்கையர்களுக்கு முன்னுரிமை அளித்து இலவச வீட்டுமனைப் பட்டாக்களும் வீடுகளும் வழங்கப்படுகின்றன.
* மகளிருக்காக அறிவிக்கப்பட்ட விடியல் பயண திட்டத்தில் திருநங்கையர்களும் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
* முதல் முறையாக உயர்கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும் புதிய திட்டத்திற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Tags : Sonnararu ,Chief Minister ,M.K. Stalin ,Transgender Welfare Board… ,
× RELATED இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான்...