×

ஈரானை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 31 பேர் பலி; 150 பேர் காயம்

துபாய்: லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். ஈரானுக்கு ஆதரவாக லெபனான் நாட்டில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர், ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்களால் ஆத்திரமடைந்துள்ளனர். இதையடுத்து ஹிஸ்புல்லா படை இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி தரும் விதமாக லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா படையினரின் இடங்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 150 பேர் காயமடைந்துள்ளனர்.

Tags : Israel ,Lebanon ,Iran ,Dubai ,Hezbollah ,United States ,Hizbullah Force ,
× RELATED வளைகுடா பதற்றத்தால் கச்சா எண்ணெய்...